நடிகை மதுபாலாவின் மகளா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. சீக்கிரமே அடுத்த ஹீரோயின் ரெடி..!

நடிகை மதுபாலாவை தமிழ் ரசிகர்கள் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.மலையாள திரைப்படங்களின் மூலம் இண்டஸ்ட்ரீக்கு வந்த மதுபாலாவுக்கு தமிழில் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. அறிமுகப்படமே சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது.

1972 இல் சென்னையில் பிறந்த மதுபாலா கே.பாலசந்தர் இயக்கிய அழகன் திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரீக்கு அறிமுகமானார். 1992 இல் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது, தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்தார் மதுபாலா.

சினிமாவில் பிஸியாக இருந்தபோதே கல்யாணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார் மதுபாலா. 1999 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷாவை திருமணம் செய்துள்ளார் மதுபாலா.

இப்போது மதுபாலாவுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். நடிப்புக்கு முழுக்குப் போட்டு குடும்பத்தையே கவனித்துவரும் மதுபாலாவின் மூத்த மகளின் பெயர் அமெயா.

இளைய மகளின் பெயர் கெயா . இந்நிலையில் நடிகை மதுபாலா தனது மகளோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், அடடே நடிகை மதுபாலாவின் மகளா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே..ரோஜா படத்தின் பார்ட் 2 எடுத்தால் இவர்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.