அடேங்கப்பா.. விஜய் டிவி ஜோடியில் ஆடிய நேத்ரன் மகளா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நேத்ரன். இவன் சின்னத்திரை சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார். இவர் முதன் முதலாக மருதாணி என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து பல சேனல்களில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்து உள்ளார். இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து உள்ளார்.

இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று உள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நம்பர் 1 சீசன் 5 என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயாவும் கலந்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து பல பாடல்களுக்கு நடனம் ஆடி இருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் அவருடைய மகள் சின்னப் பெண்ணாக இருந்தார். தற்போது இவரின் மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நேத்ரன் மகள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்து விட்டாரா!! என்று கேட்டு வருகிறார்கள். மூத்த மகள் அபிநயா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டு இருக்கிறார்.

இரண்டாவது மகள் அஞ்சனா பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநயா தற்போது தன்னுடைய கல்லுரிப் படிப்பு படித்து கொண்டு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.