பிடிவாதமாக தனக்கான பங்கை கேட்டு வாங்கி சாப்பிடும் காகம்.. இந்த காகத்தின் புத்திசாலித்தனத்தைப் பாருங்க..!

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும்.

அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.

அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி காகம் என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே வீட்டில் பெண்கள் மீன் வெட்டும் போது காகம், பூனை போன்ற உயிரினங்கள் அதைச் சுற்றி நின்று கொள்வதுண்டு. இங்கேயும் அப்படித்தான்.

ஒரு பெண் மீனை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு காகம் வந்தது. அந்த காகத்திற்கு முதலில் ஒரு துண்டு மீனைப் போட்டார்கள். ஆனால் மீண்டும் மீனைக் கேட்டு காகம் பிடிவாதத்தோடு மீனை வெட்டும் பெண்ணின் பக்கத்திலேயே நின்றது.

ஒருகட்டத்தில் அந்த காகம், குழந்தையைப் போல் குழந்தை எப்படி தாயிட, உரிமையாகக் கேட்குமோ, அதேபோல் செயல்பாடுகளில் இறங்கியது. மீன் கேட்டு அந்த பெண்ணின் சேலையைப் பிடித்து இழுத்தது. அந்த பெண்ணோ, பதிலுக்கு நீ உதை வாங்கப் போற என திட்டுகிறார்.

ஆனால் காகம், கடைசிவரை அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்துக்கொண்டே, சேலையை மீண்டும் பிடித்து இழுக்கிறது. கடைசி வரை இந்த காகம் பிடிவாதத்தோடு நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்கள்.