நடிகை நஸ்ரியாவின் தம்பி யார் தெரியுமா..? அட அவரும் ஒரு நடிகர் தான்.. யாருன்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில் வெளிவரும் திரைபடங்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் பிறமொழி நடிகைகளே அதிக அளவில் நடித்து வருவதோடு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அதில் மலையாள நடிகைகளே அதிகளவில் நடித்து வருகிறார்கள் அதனை தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார்கள். இந்நிலையில் மலையாளத்தில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்த போதிலும் வெகுவாக தனது நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதோடு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள்.

அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல முன்னணி நடிகை நஸ்ரியா.

தனது சுட்டித்தனமான நடிப்பாலும் இளமையான தோற்றத்தாலும் நடித்த முதல் படத்திலேயே பலரது மனதை கொள்ளை கொண்டார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தார்.

நடிகை நஸ்ரியா நசீம் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர் ஆவார். நடிகை நஸ்ரியா நசீம் தமிழில் திருமணம் என்னும் நிக்காஹ்,வாயை மூடி பேசவும்,கதை திரைக்கதை வசனம் இயக்கம், ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.

இந்நிலையில் ,நடிகை நஸ்ரியா மலையாள நடிகரான பகத் பாசில் என்பவரை திரு மணம் செய்து கொண்டார். தற்பொழுது சமூக வலைத்தளத்தில் தனது தம்பி நவீன் நஜிமின் புகைபடத்தை பதிவுட்டுள்ளார்.நவீன் நஜிம் மலையாள திரைப்படத் துறையில் அம்பிலி என்ற பிரபலமான திரைப்படத்தில் நடித்திருந்தார்.