உலக அழகி நான்தான் பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா? தற்போது அவரின் நிலை என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பல நடிகைகள் வந்து சில காலம் மிக பிரபலமாக இருப்பார்கள். பின்னர் அவர்கள் காணாமல் போய்விடுகிறது வழக்கம் தான். அவர்களைநாம்  மறந்து கூட இருப்போம் . அப்படியான ஒரு நடிகை தான் தூத்துக்குடி படத்தில் நடித்த  நடிகை கார்த்திகா . நடிகை கார்த்திகா அவர்கள் 1991 ஆம் ஆண்டு திருக்கடையூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார் .

அதன் பின்னர் திரைப்பட ஆடிசன் மூலம் இவருக்கு தூத்துக்குடி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் கடந்த 2006ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான்  தூத்துக்குடி . இந்த திரைப்படத்தை  சஞ்சய் ராம் இயக்கத்தில் சுனிதா ஹரி தயாரிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில்  வெற்றிகரமா பேசப்பட்டதிரைப்படம் தான்  தூத்துக்குடி .

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கார்த்திகா. இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்ததை விட இந்த திரைப்படத்தில் வந்த கருவாப்பையா எனும் பாடலில் நடனமாடியதன்  மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் .

நடிகை கார்த்திகா இந்த திரைப்படம் மூலம் இவருக்கு வெற்றி  வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் .பாடல் மூலம் மக்கள் மனதில் பெருமளவில் இடம் பிடித்தார் . இதைத் தொடர்ந்து நடிகை கார்த்திகா அவர்கள் பிறப்பு எனும் திரைப்படத்திலும் உலக அழகி நான் தான் எனும் பாடலில் நடனம் ஆடினார் .

இது அவருக்கு உலக அளவில் ஹிட்டை கொடுத்தது . மேலும் நடிகை கார்த்திகா பிறப்பு , நாளைய பொழுது உன்னோடு,  ராமன் தேடிய சீதை,  மதுரை போன்ற படங்களில் நடித்துள்ளார் . இவர் நடிகையாக நடித்த போதிலும் மக்கள் மத்தியில் பிரபலமானது அந்த இரு பாடல்கள் மூலம் தான்.

பின்னர் இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் திரைப்படம் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ஆகும் . அதன்பின் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார் நடிகை கார்த்திகா. இந்த நிலையில் ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்கப் போவதாக கார்த்திகா பேட்டியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரிடம் ஏன் இத்தனை ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய போது தனது தங்கையின் படிப்பு காரணமாக நாங்கள் மும்பை செல்ல வேண்டியிருந்தது அதனால்தான் என்னால் நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் .

மும்பை செல்ல வேண்டிய இருந்தபோதும் கூட திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தும் ஏற்க முடியாத நிலையில் இருந்தேன் என்று கூறியுள்ளார் .இவர் சமீபத்தில் சென்னை வந்த போது கூட இவரது நண்பர்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஏன் நீங்கள் படங்களை தற்போது நடிக்கவில்லை என்று இவரிடம் கேட்டிருந்தார்கள்.

அதற்கு நடிகை கார்த்திகாவின் குடும்பத்தாரும் நீ இன்னும் மக்கள் மனதில் பிரபலமாக தான் இருக்கிறாய் நீ மீண்டும் திரைப்படங்களில் நடிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். இந்தவகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது .

நடிகை கார்த்திகா அவர்களும் சரி என்று எண்ணி அந்த படத்திற்கு நடிப்பதாக ஒப்புக்கொண்டார் . மேலும் இவருக்கு தமிழ் தெலுங்கு என நான்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது…சிறந்த கதை மற்றும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து மக்கள் பார்வையை என் மீது விலவெஇப்பெந் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகை கார்த்திகா …

Leave a Reply

Your email address will not be published.