தெனிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர், அதன் பிறகு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைபடத்தில் நடித்து திரையுலகில் நடிக்க தொடங்கினர் இவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன் படத்தில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்றார். அந்த வகையில் மேலும் பைரவா,சர்கார், தானசேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழில் மட்டுமே தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த, இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் என இரு படங்களில் நடித்து வருகிறார்.
அதே போல் தெலுங்கில் தற்போது சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் Sarkaru Vaari Paata எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வளம் வரும் எஸ்.தமன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தமனை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..