நம்மையும் மீறி சில நேரங்களில் நம் அறிவு பளிச்சென வேலை செய்யும். இங்கேயும் அப்படித்தான். ஒரு இளைஞர் செய்த சமயோகிதமான செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுவாகவே சாலையில் காரில் செல்பவர்களில் பலர் மின்னல் வேகத்தில் வேகமாகச் செல்பவர்கள் தான். அதிலும் மழை நேரத்தில் கேட்கவே வேண்டாம். பல நேரங்களில் இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது சேறும், சகதியும் அடித்துவிடுவதும் உண்டு.
இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞர் சாலையில் போன் சேசியவாறு நடந்து போய்க்கொண்டு இருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அது சாலையில் சகதியை அடித்துக்கொண்டு ஸ்பீடாக வந்தது.
கார் வந்த வேகத்தைப் பார்த்ததும் இளைஞர் ஒருவர் உடனே சாலையில் கிடந்து ஒரு கல்லை எடுக்கிறார். அடுத்த நொடியில் மின்னல் வேகத்தில் வந்த கார் ஆட்டோமெட்டிக்காக ஸ்லோவாகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.
இது எப்படி இருக்கு…?😀 pic.twitter.com/LR29swiYCX
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) July 20, 2021