கமல் கையால் தாலி வாங்கி 8 வருட காதலியை கரம் பிடித்த சினேகன்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்… வைரலாகும் திருமண வீடியோ

இவர் ஏழை விவசயாகுடும்பத்தில் பிறந்து தமிழ் திரையுலகில் சிறந்தபாடல்களை எழுதிய பாடல் ஆசிரியர், நடிகர், மற்றும் கவிதை எழுத்தாளர் பன்முகம் திறமை கொண்டவர் கவினர் சினேகன். இவர் கவினர் வைரமுத்து இடம் 5 வருடங்களாக பணியாற்றி அதன் பின் புத்தம் புது பூவே என்ற திரைபடத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பகவதி, கோவில்,ஆட்டோகிராப், ராம், மன்மதன் போன்ற படங்களில் கருத்துள்ள பாடல்களை பாடி மக்கள் மத்தியில் மிகுந்த வர வேற்பை பெற்றவர் கவினர் சினேகன். இவர் தமிழ் திரைவுலகில் கிட்டத்தட்ட 2500 பாடல்களை எழுதியுள்ளார் கவினர் சினேகன்.

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா, தோழா தோழா தோள் கொடு கொஞ்சம், நேபகம் வருதே நேபகம் வருதே, போன்ற பாடல்களில் மூலம் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தவர் கவினர் சிநேகன், இவருக்கு தமிழ் சினிமாவில் சின்ன பாரதி என்னும் பெயர் உண்டு. தமிழ்நாடு அரசின், சிறந்த பாடல் ஆசிரியர் விருதை இரண்டு முறை பெற்றுள்ளார் கவினன் சினேகன். அதுமட்டும்மல்லாமல் இவர் கவி சிற்பி, சின்ன பாரதி, எழுச்சி கவினர் போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்த இவர், விஜய் தொலைகாட்சியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 1யில் கலந்துகொண்டார் அதில் கட்டிபுடி வைத்தியம் செய்து இவர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வர வேற்பை பெற்ற இவர் அதன பின் அவர் நிறைய படங்களுக்கு பாடல் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் பணிபுரிந்தார்.

கடந்த தேர்தலில் அவர் ஒரு இடத்தில போட்டியிட்டு தோல்வியை அடைந்தார் இந்த நிலையில் சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தங்களது திருமண செய்தியை அண்மையில் அறிவித்தார்கள்.அதன்படி இன்று சீர்திருத்த முறையில் இவர்களது திருமணம் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

கமல் முன்னிலையில் இடம்பெற்ற திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சினேகன் மற்றும் கன்னிகா ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.