மனைவியை சந்தோஷமாக வெச்சிக்க வெளிநாட்டில் உழைத்த கணவன் : ஊர் திரும்பிய கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று மனைவி மகிழ்ச்சியாக இருப்பதற்காக உழைத்த கணவன் ஊருக்கு திரும்பியதும் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ச்சி விடயம் நடந்ததால் வேதனையில் ஆழ்ந்துள்ளார்.

தமிழகத்தின் நாகை மாவட்டம் அச்சக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி. பெற்றோர் இல்லாத ஆதரவற்ற நிலையில் இருந்த கலைமணி, மனோகர் என்பவரது மகளான நிரோஜாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

சொந்த கிராமத்தில் போதுமான வேலை இல்லாமல் போனதால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, மனைவியிடம் கூறியிருக்கிறார்.

மனைவி நிரோஜாவும், பத்திரமா போய்வாங்க, என்னை பற்றி கவலைப்படாதீங்க, உங்கள் நினைவோடு நீங்கள் வரும்வரை இருப்பேன் எனக் கூறி அனுப்பியிருக்கிறார். வேலை முடிந்து சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய கலைமணி, தனது மனைவியோடு வசித்துவந்துள்ளார்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்த கலைமணி அதிர்ச்சியில் உறைந்துபோனார். பக்கத்தில் படுத்திருந்த மனைவி நிரோஜாவை காணவில்லை. எங்கே சென்றிருப்பார் என வீட்டில் உள்ள எல்லா இடத்திலும் தேடியுள்ளார். ஆனால், மனைவியைக் காணவில்லை.

பின்னர் பொலிசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், 5 பவுன் நகை, 3 லட்சம் பணத்தோடு எனது மனைவி நிரோஜா காணவில்லை. அவரை எனக்கு கண்டுபிடித்துத் தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

பொலிசார் விசாரணையில், நிரோஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரோடு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. தாயோ, தந்தையோ, மற்ற உறவுகளோ இல்லாத கலைமணி மனைவியை எல்லா உறவுகளுமாக நினைத்து சம்பாதித்தார். ஆனால் அவர் நம்பிய மனைவியோ, அவர் தலையில் இடியை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதையடுத்து மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்ள வெளிநாட்டில் அரைவயிறும், கால்வயிறும் சாப்பிட்டு மிச்சப்படுத்தி பணமும் நகையுமா அனுப்பிவச்சேன்.

எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு என்ன ஏமாத்தி நடைபிணமாக்கிட்டுப் போயிட்டாளே என மனைவியை நினைத்து கலங்கி போய் நிற்கிறார் கலைமணி.

Leave a Reply

Your email address will not be published.