புதிய படத்தில் கமிட்டான குக் வித் கோமாளி பிரபலம் புகழ்..! யாருடைய படம் தெரியுமா?

வெள்ளித்திரையை காட்டிலும் தற்போது சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது. அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெருமளவில் ரசிக்கப்ட்டு வருவதோடு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பதோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோ மாளி மூலம் தமிழ் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் புகழ். அந்நிகழ்ச்சி அவருக்கு சினிமாவில் ஜொலிக்க பெரிய ரீச் கொடுத்துள்ளது. 2வது சீசன் நடுவில் கூட ஒரு பட படப்பிடிப்பிற்கு சென்றுள்ளதால் அவர் ஒரு எபிசோட் வரவே இல்லை.

இப்போது புகழ் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார். தற்போது என்ன தகவல் என்றால் நடிகர் சிவா நடிக்கும் புதிய படமான காசேதான் கடவுளடா என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர், நடிகருடன் புகழ் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.