அண்ணா மலை சீரியல் நடிகை ஐஸ்வர்யாவா இது? திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாங்களே! புகைப்படம் இதோ..

2002ல் நடிகை ராதிகாவின் தயாரிப்புல D.J.பாஸ்கர் இயக்கத்தில் வெளிவந்த நாடகம்தான் அண்ணாமலை. இதுல சிவகுமார், ராதிகா, ஜோதிலக்ஷ்மி, குயிலி, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சண்முகசுந்தரம், தேவதர்ஷினி, சியாம் கணேஷ், விஜய் ஆதிராஜ், தீபா வெங்கட் இப்படி பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அவங்களுக்கு சமமான நடிப்புத் திறமையை வெளி காட்டி இருப்பாங்க நடிகை ஐஸ்வர்யா.

இவங்க மாங்கல்யம், பந்தம், அகல் விளக்குகள், கங்கா யமுனா சரஸ்வதி போன்ற நாடகங்களில் நடித்திருந்தாலும் போதை பழக்கத்திற்கு ஆளான ஒரு பெண்ணாக ரொம்ப பொருத்தமா அண்ணாமலை தொடர்ல நடிச்சு இருப்பாங்க.

90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே இவங்கள தெரியாதவர் இருக்க முடியாது. சீரியல்களை தொடர்ந்து இவங்களுக்கு படவாய்ப்புகளும் அதிகளவில் வந்தது. புதுமுக நடிகருடன் புழல் அப்படிங்கிற படத்திலையும், ஏப்ரல் மாதத்தில் படத்தில் சினேகா உடைய தோழியாகவும், டும்டும்டும் படத்தில் ஜோதிகாவுக்கு தங்கச்சியாக நடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் இவங்களுக்கு கல்யாணம் ஆகி துபாய்க்கு போய்டாங்க.

இப்போம் கனடாவில் இவங்க சரிகமப மாதிரியான இசை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும், RJ வாகவும் வேலைப்பார்த்து கொண்டு இருக்காங்க. ரொம்ப நாள் கழித்து அவங்க கொடுத்த ஒரு பேட்டியில் இப்போ நான் என்னுடைய பையன் மற்றும் கணவருடன் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பல தொடர்களில் நடித்து இருந்தாலும் அண்ணாமலை சீரியல் எனக்கு நிறைய அனுபவங்களையும் எனக்கான ஒரு அடையாளத்தையும் கொடுத்தது,

இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த இயக்குனர் பாஸ்கர் அவர்களுக்கும் ராதிகா மேடம்க்கும் என்னுடைய நன்றிகளை நான் சொல்லிக்கிறேன்அப்படின்னு சொல்லி இருக்காங்க.