சதுரங்க வேட்டை பட நடிகையா இது? மாடர்ன் உடை கையில் குழந்தை என எப்படி ஆகிட்டார் பார்த்தீர்களா..!

தமிழ் திரை உலகில் மிக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படமாக வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் சதுரங்க வேட்டை இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இஷாரா நாயர் தமிழில் முதன்முதலாக வெண்மேகம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் பப்பாளி இவன் யார் என்று தெரிகிறதா, பப்பரப்பாம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே சரியான வெற்றியை கொடுக்காத காரணத்தால் தான் பிறகு பட வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சினிமாவில் நடிப்பதையே முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய திருமண வாழ்க்கையை தொடர ஆரம்பித்து விட்டார் அந்தவகையில் திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்த நமது நடிகை நிஜத்தில் படு கிளாமராக இவர் துபாயை சேர்ந்த ஷகில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை துபாயில் திருமணமாகி செட்டில் ஆகியது மட்டுமல்லாமல் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வெகுநாளாக பிரேக் எடுத்த நமது நடிகை தற்போது எங்கிருந்து வரீங்கடா நீங்க எல்லாம் என்ற திரைப்படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் அவருடைய குடும்ப புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.