செல்போனிலேயே மூழ்கிக்கிடக்கிறார்களா உங்கள் குழந்தைகள்? இப்படி செஞ்சுபாருங்க.. இனி செல்போனையே தொட மாட்டாங்க..!

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகள் என்னவோ எப்போதும் விளையாடிக் கொண்டும், செல்போனில் கேம்ஸ், வீடியோக்கள் பார்க்கவும் தான் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் சதா, சர்வநேரமும் படி, எழுது என டார்ச்சர் செய்துகொண்டே இருக்கின்றனர்.

இந்த கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு கல்வியே செல்போனுக்குள் வந்துவிட்டது. இதையே காரணமாக வைத்துக்கொண்டு எப்போதும் செல்போனிலேயே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இங்கேயும் அப்படித்தான் ஒரு வீட்டில் இருகுழந்தைகள் இருக்கின்றனர்.

இருவருமே எப்போதுமே செல்போன் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். கண் கெட்டுப் போய்விடும் என அவர்களது தாயார் அறிவுரை சொல்கிறார். ஆனால் அதை அவர்கள் கேட்காமல் தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

உடனே அம்மா அவர்களது அப்பாவின் கன்னத்தில் ஒன்று போட்டு அவர் கையில் இருக்கும் செல்போனை வாங்குகிறார். இதைப் பார்த்ததும், குழந்தைகள் இருவரும் பட, படவென தங்கள் கையில் இருக்கும் செல்போனைக் கொடுக்கிறார்கள். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

Leave a Reply

Your email address will not be published.