கிணற்றுக்குள் விழுந்த சிறுமி: காப்பாற்ற சென்ற 30 பேர் உயிருக்கு போராடும் அவலம்! நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில், விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் கு.ழ.ந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

அந்தக் கு.ழ.ந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது.

இதனால் கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக் குழிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் 15 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

அங்கு நடந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், தனது ட்விட்டர் பக்கத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.