கல்யாண வீட்டில் போட்டோகிராபர் செய்யும் வேலையைப் பாருங்க.. மாப்பிள்ளை பாவம்யா.. என்ன கொடுமை சார் இது? வைரலாகும் வீடியோ..!

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர்.

வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது.

சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.

அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. சில திருமணங்களில் கல்யாணப் பொண்ணே திடீரென நடனமாடி பட்டையைக் கிளப்புவதும் உண்டு.

அந்தவரிசையில் இங்கே ஒரு போட்டோகிராபர் மணமேடையில் வைத்தே கல்யாணப் பொண்ணையும், மாப்பிள்ளையையும் ரொம்பவே ரொமாண்டிக்காக போட்டோ எடுக்க முயற்சிக்கிறார்.

ஆனால் மணமகனுக்கு ரொமாண்டிக் வரவில்லை. கூடவே போட்டோகிராபர் சொல்லிக்கொடுத்த ஸ்டெப் படி மணமகளை சாய்த்து பிடிக்கவும் தெரியவில்லை. இதனால் டென்ஷன் ஆன கல்யாண போட்டோகிராபர், நீங்கள்லாம் எதுக்கு கல்யாணம் பண்ணுறீங்க என கடுப்பு ஆகிறார்.

தொடர்ந்து அவரே மாப்பிள்ளையை அப்படி சரிந்துக்காட்டுகிறார். ஆன பின்பும் அவருக்கு புரியாது என கடைசியில் மணப்பெண் பக்கம் திரும்புகிறார். அவரை எப்படி சாய்க்க வேண்டும் என சாய்த்துகாட்ட முன்வர கடைசியில் மாப்பிள்ளை எனக்கு புரிந்துவிட்டது என சாய்ந்து ரொமாண்டிக் போஸ் கொடுக்கிறார். ஆனாலும் போட்டோகிராபர் இவ்வளவு டெரரா இருந்தா எப்படி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.