அண்ணன் கல்யாண ஊர்வலத்தில் செம ஆட்டம் போட்ட தங்கச்சி.. வைரல் வீடியோ!!

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.

சில திருமணங்களில் கல்யாணப் பொண்ணே திடீரென நடனமாடி பட்டையைக் கிளப்புவதும் உண்டு. அந்தவரிசையில் இங்கே, ஒரு பெண், தன் அண்ணனின் கல்யாணத்திற்கு மணப்பெண் ஊர்வலத்தில் கூடவே வருகிறார். அப்போது திடீரென அவர் நடனமாடி அசத்துகிறார். அவரோடு சேர்ந்து ஊர்வலத்தில்வரும் கல்யாணப் பெண்ணும் ஆடத் துவங்கினார். அந்த இளம்பெண்ணின் நடனம் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.