பருத்திவீ ரன் பிரியாமணிக்கும் பாலிவுட் நடிகை வித்யா பாலனுக்கும் இப்படி ஒரு உறவு முறையா..? அட, இத்தன நாளா இது தெரியாம போச்சே..!

2004ஆம் ஆண்டு வெளிவந்த கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அது ஒரு கனாக் காலம், மது, பருத்தி வீ ரன் உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பருத்தி வீ ரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததால் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார். இத்திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எனவே தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் ஆ க்டிவாக இருந்து வந்தார். அதோடு சிறந்த நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்ற இவர் கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு சிறந்த நடிகையாக வலம் வந்தவர் திடீரென்று முஸ்தப் ராஜ் என்ற தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் சமீப காலங்களாக மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமாக வேண்டும் என்றால் இ ழந்த மார்க்கெட்டை பெற வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் க வர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சிலவற்றில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் பிரியா மணிக்கும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் வித்யாபாலனுக்கும் இப்படி ஒரு உறவு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது நடிகை வித்யா பாலன் பாலிவுட்டில் ஒரு சிறந்த நடிகை ஆவார். இந்நிலையில் நடிகை பிரியாமணிக்கு வித்யா பாலன் மாமான் மகளாம்.