555 நாட்கள் இதயம் இல்லாமல் உயிர் வாழ்ந்த அதிசய மனிதன்: இது எப்படி சாத்தியம்?

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கிட்டதட்ட 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. Larkin என்ற நபரே 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்துள்ளார்.

2014 நவம்பர் மாதம் Larkin-ன் இதயம் செயலிழந்தை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்டு, இதயத்திற்கு பதிலாக Syncardia செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த Larkin, Syncardia சாதனத்தை பையில் முதுகில் மாட்டியபடி உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு மே மாதம் Larkin-க்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Frankel Cardiovascular மையத்தில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதன் பின் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற Larkin வீடு திரும்பியுள்ளார். LarKin சுமார் 555 நாட்கள் இதயம் இல்லாமல் உயிர் வாழ்ந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Larkin குடும்பத்தில் அவருக்கு மட்டுமின்றி அவரது மூத்த சகோதரர் டொமினிக்கும் இதேபோன்ற இதயப்பிரச்சினை இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.