பேஸ்புக் காதலால் குடும்பப் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலி, பொலிசிடம் சிக்கிவிடுவோம் என்று அஞ்சி தூக்கில் தொங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவர், நேற்று முன் தினம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் கணவர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து, அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், தனது கை, கால்களை கட்டி வாயையும் துணியால் அடைத்து, பாலியல் பலாத்காரம் செய்து தான் அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அதன் பின் இது குறித்து புகார் தெரிவிக்க, பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போது, கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொள்ளையர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதால், அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும் பொலிசார் அந்த கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக,

பியூட்டி பார்லர் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமெராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது குறித்த பியூட்டி பார்லருக்கு, ஒரு நபர் மட்டும் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்துள்ளது.

கொள்ளை நடந்த அன்று கூட அந்த நபர் வந்து சென்றுள்ளார். அதன் பின், கங்காதேவியின் செல்போனை ஆய்வு செய்து, அதைத் தொடர்ந்து ஊட்டியில் பதுங்கியிருந்த, மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

விசாரணையில், மனைவி, பிள்ளைகளை பிரிந்து சென்னையில் வாழ்ந்து வந்த முத்துப்பாண்டிக்கு, கங்காதேவியுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் கங்காதேவி அவினாசியில் அவருக்கு தனியார் தொழிற்சாலையில் வேலைவாங்கிக் கொடுத்து அங்கேயே முத்துப்பாண்டியை தங்க வைத்து தன்னுடைய பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து நகை, பணத்துடன் ஊட்டிக்கு ஓடிப் போவதற்காக திட்டம் தீட்டி, நகை கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

3 பேர் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கணவரிடம் கூறினால், அதுகுறித்து வெளியில் சொல்ல மாட்டார் என நினைத்த கங்காதேவிக்கு,

பொலிசார் விசாரணையை தொடங்கியதும், சிக்கிக் கொள்வோம் என பயந்து, வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.