மோசமான நிலைமையில் விமல்.. கைகொடுத்து காப்பாத்த யாருமே இல்லையா?

தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி நடிகர் என்ற பெயர் எடுப்பது மிகவும் கடினம். ஆனால் அசால்டாக மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்தவர் விமல். ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் இவரது படங்கள் தொடர்ந்து சராசரியான வெற்றிகளை குவித்து வந்தது.ஆனால் எல்லா ஹீரோக்களுக்கும் இருக்கும் அதே ஆசைதான் இவருக்கும். வெகு சீக்கிரத்தில் மாஸ் ஹீரோவாக மாறி விட வேண்டும் என ஆசைப்பட்டு சில படங்கள் அப்படி நடித்தார். அதன் பிறகு அவரே யோசித்திருப்பார், ஏன் இப்படி நடித்தோம் என்று.

கடந்த சில வருடங்களில் பெரிய அளவு வெற்றியை கொடுக்காத விமல் கடைசியாக வேறு வழியே இல்லாமல் சொந்த தயாரிப்பில் மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் செல்லாததால் பெரிய கடனுக்கு ஆளாகிவிட்டாராம்.

இதுகுறித்து பணத்தை திரும்ப கேட்டவர்களிடம் கொஞ்சம் ஏறுக்கு மாறாக பேசி வம்பு வழக்குகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக இவரது பெயர் தமிழ் சினிமாவில் கொஞ்சம் டேமேஜ் ஆகி விட்டது.

இதனால் விமலை வைத்து படம் தயாரிக்க பலரும் யோசித்து வருகின்றனராம். விமலை வைத்து படமெடுத்தால் கோர்ட், கேஸ் என அலைவது தான் மிச்சம் என தயங்கி வருகின்றனர். இதனால் விமல் படங்களை தயாரிக்க யாருக்குமே விருப்பமில்லையாம்.

இருந்தாலும் தனக்கு தெரிந்த நண்பர்கள் தயாரிக்கும் சில படங்களில் நடித்து வருகிறார் விமல். இந்த படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று விமல் மீது ஒரு நல்ல எண்ணம் வந்தால் தான் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் எனவும், அப்படி இல்லை என்றால் சினிமாவை விட்டே ஒதுக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.