இந்த தலைமுறை இல்லங்களில் இதைப் பார்க்கவே முடியாது.. திரும்பிவராத அற்புதத் தருணம் இது..!

இன்று எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. அன்று இடுப்பு வளைய இட்லிக்கு பெண்கள் மாவு ஆட்டினார்கள். இன்று அந்த வேலையை கிரைண்டர் செய்கிறது. அதேபோல் கஷ்டப்பட்டு பெண்கள் துவைக்கும் வேலையை இன்று வாசிங் மிஷின் செய்கிறது. இதேபோல் அம்மியில் அரைத்து செய்த சட்னிக்கும் கூட இப்போது மிக்ஸி வந்துவிட்டது.

அம்மியில் அரைத்து சட்னி செய்து சாப்பிட்ட போது நம் பெண்களிடம் ஆரோக்கியம் இருந்தது. ஆனால் இப்போது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவை கூடியிருப்பதற்கு இன்றைய பெண்களிடம் உடலுழைப்பு இல்லாதது தான் காரணம். இன்றெல்லாம் சின்ன அம்மியைக் கூட நம்மால் தூக்க முடியவில்லை. அவ்வளவு சோம்பேறியாகி விட்டோம்.

அதேபோல் ஆட்டுக்கல் முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு இருந்தது. அதில் தான் பெண்கள் அரிசியைப் போட்டு அடித்து மாவு இடிப்பார்கள். இன்று இதெல்லாம் இந்த தலைமுறைக்குத் தெரியாமலேயே போய்விட்டது. இதோ இந்த வீடியோவில் அம்மியில் இளம்பெண்கள் எவ்வளவு அழகாக மாவு இடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.