நடிகை சோனாவா இது..? உடல்எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க! லேட்டஸ்ட் லுக்..

தமிழ் சினிமாவில் வலம் வந்த கவர்ச்சி நடிகைகளில் சோனாவும் ஒருவர். தமிழில் கடைசியாக பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா ‘பச்சமாங்கா’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் தன்னை எங்கே போனீர்கள் என்று கேட்கும் ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நடிகை சோனா, இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை நிராகரித்திருக்கிறேன். அஜித்தின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா.

அதன் பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வே டங்களில் நடித்து வந்தார்.ஆனால் அவருக்கு பட வாய்ப்புகள் அப்படியே குறைய ரூட்டை மாற்றி வேறு விதமாக நடித்து வந்தார். இடையில் சுத்தமாக கேமரா முன் அவரை காணவில்லை.

தற்போது சோனா புதிய சோனாவாக உடல் எடை எல்லாம் குறைத்து ஆளே மாறியுள்ளார். அவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் அபி டெய்லர் சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

அவர் உடல்எடை குறைத்து சீரியல் லுக்கில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம சோனாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sona Hayden (@sona.hayden)