மனைவியின் அக்காவை இழுத்து சென்ற நபர்! சில மணிநேரங்களில் போனில் வந்த பேரதிர்ச்சி!!

தமிழகத்தில் மனைவியின் அக்காவை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன்.

இவரது மூத்த மகள் மஞ்சு (வயது 20), இன்னும் திருமணம் ஆகவில்லை, இந்நிலையில் இளைய மகளான சரண்யா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படவே, சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில் அவரை சமாதானம் செய்ய கார்த்திக் வந்துள்ளார்.

ஆனால் சரண்யா செல்ல மறுக்கவே, அவரது அக்காவான மஞ்சுவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், தங்கையின் கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு, சில மணித்துளிகளுக்கு உள்ளாக தூக்கில் தொங்கியதாக மஞ்சுவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரியவரவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மஞ்சுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தங்கையின் க.ண.வரின் வீட்டிற்கு மஞ்சு சமாதானம் பேச வந்தாரா? அல்லது கார்த்திக் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து இருக்கிறாரா?

இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து, தற்கொலை நாடகம் சித்தரிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.