கடைக்கு வந்த 7 வயது சிறுமி: அழுது கொண்டே சென்று அம்மாவிடம் கூறிய பகீர் உண்மை!!

பெட்டிக்கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த சிறுமியை கடை உரிமையாளர், வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் அடுத்த சமாதானம் நகரை சேர்ந்தவர் ஜாபர் (23). இவர், அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஜூலை 4ம் தேதி 7 வயதுடைய சிறுமி ஒருவர் நொறுக்குத்தீனி மற்றும் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது ஜாபர், அந்த சிறுமியை ஏமாற்றி கடைக்குள் அழைத்து சென்று வன்கொடுமை தொல்லை கொடுத்து, சிறிதுநேரம் கழித்து அவருக்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து வீடு திரும்பிய சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுததையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொலிசார் உடனே பெட்டிக்கடைக்கு வந்த ஜாபரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த நபர் சிறுமியிடம் மட்டும் நடந்து கொண்டாரா? இல்லை இதுபோன்று அதிகமானவர்களை தொந்தரவு கொடுத்தாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.