அச்சு அசல் சாவித்ரியாக மாறிய சீரியல் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் : கீர்த்தி சுரேஷையும் மிஞ்சி விட்டார் போல!

தற்போது காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட சின்னதிரையைதான் மக்கள் அதிகம் பார்த்து ரசித்து வருகின்றனர் . காரணம் சின்னிதிரையில் ஒளிபரப்பாகி வரும் புது புது தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்து வருகின்றனர். வெள்ளித்திரையில் ஒரு கேரக்டரில் நடித்த நடிகர்களை கூட மக்கள் மறந்து விடுவார்கள்.

ஆனால் சின்னத்திரை சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகர்கள் மக்களை அதிகம் கவர்ந்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகின்றனர்.அந்தளவிற்கு மக்களின் வீடிகளுக்கே சென்று சின்னத்திரை சீரியல்கள் மக்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைகாட்சியான சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் ரோஜா.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நடிகர் திலகம் சாவித்ரி நடிப்பைப் பற்றி யாருக்கும் கூற வேண்டிய அவசியமே இல்லை.இந்த நிலையில் சீரியல் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் சாவித்ரி போல மேக்கப் செய்துள்ளார்.

ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன் பின்னரும் ’குஷி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்துள்ள ரேஷ்மா வெங்கடேஷ், சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளவர்.

இந்த நிலையில் ரேஷ்மா வெங்கடேஷ் சமீபத்தில் சாவித்ரி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் எனது குரு சாவித்ரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்குத்தான் பெருமைப்படுகிறேன் என்றும் சாவித்ரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தனது நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார்.பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.