கணவரை விவகாரத்து செய்து மாமனாரை திருமணம் செய்து கொண்ட பெண்! பொலிசாரிடம் சொன்ன காரணம்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

இந்தியாவில் பெண் ஒருவர் தன்னுடைய மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் முடிந்த 6 மாதத்தில் அவர்கள் இருவரும், விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதற்கிடையில், அந்த இளைஞரின் தந்தை திடீரென்று காணமல் போனதால், அந்த இளைஞர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞரின் தந்தையும், விவாகரத்து பெற்ற அந்த இளைஞரின் மனைவியும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞரின் உறவினர்கள், இது குறித்து மேலும் புகார் அளித்துள்ளனர்.

அப்போது, அந்த பெண், தான் தன்னுடைய இரண்டாவது கணவரான மாமனாருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், அவருடனே வாழ ஆசைப்படுவதாகவும் காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.

அதன் பின், இது தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.