தொலைக்காட்சியின் பிரபல சீரியல் தொடரான ராஜா ராணியில் முக்கிய கதாபாத்திரமான மாமியார் வேடத்தில் நடிப்பவர் சிவகாமி எனும் பிரவீனா.இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.42-வயதான பிரவீனா 1992-ல் கௌரி எனும் படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கினார். 18 வயதில் தன் நடிப்பைத் தொடர்ந்த பீரவீனா 50 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று,சாமி 2,கோமாளி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.மேலும் தமிழில் நீண்ட காலம் ஓடிய பிரியமானவளே தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.கேரளா மாநிலத்தின் சினிமாத்துறையின் சிறந்த நடிப்பிற்கான விருதினை நான்கு முறை வாங்கியுள்ளார்.
ராஜா ராணி 2 சீரியல் விஜய்யில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். இதில் படிக்காத நாயகன், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் வாழும் நாயகி பற்றிய கதை தான் காட்டப்படுகிறது. விறுவிறுப்பான காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாகிறது, இப்போது கதையில் முக்கியமான சம்பவம் நடக்க இருக்கிறது. இந்த சீரியலில் நாயகனின் அப்பாவாக நடிப்பவர் ரவி.
இவரது வே டம் கொஞ்சம் காமெடியாகவே காட்டப்பட்டு வருகிறது, அடிக்கடி மட்டும் கொஞ்சம் சீரியஸாக காட்டுகின்றனர்.தற்போது ரவி அவர்கள் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் ஷேர் செய்துள்ளார்.
அந்த என்ன புகைப்படம் என்றால் பாலிவுட் நடிகை கங்கனாவின் தலைவி பட ஸ்டில் தான்.அந்த படத்தில் ஒரு சின்ன காட்சியில் ரவி நடித்துள்ளாராம், இதோ அவர் ஷேர் செய்த புகைப்படம்,