நள்ளிரவில் தாய், தந்தை செய்த காரியம்: தூக்கத்தில் கண்விழித்த குழந்தைகள் கதறியழுத கொடுமை!!

குழந்தைகள் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் தாய் மற்றும் தந்தை இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் புதூர் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுநர் கண்ணன் (36). இவரது மனைவி இந்துமதி (34). இவர்களுக்கு உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்ட நிலையில், அனைவரும் தூங்கச் சென்றுள்ளனர். தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது தாயும், தந்தையும் வீட்டிலுள்ள ஒரே பேனில் இருவரும் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

தூக்க கலக்கத்தில் இருந்த இரு குழந்தைகளும் பெற்றோரை அழைத்து பார்த்தும், எந்தவொரு பதிலும் கூறாததால் இருவரும் கதறியழுதுள்ளனர்.

குழந்தைகளின் அழுகுரல் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக இருந்ததை அவதானித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.