நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? வெளியான தகவலால் அதிருப்தியில் ரசிகர்கள்

சினிமாவில் உச்சக்கட்ட நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.சேது திரைப்படத்தின் மூலம் தான் மிகப்பெரிய வெற்றியினை கண்ட விக்ரம் அதன் பின்பு பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து இவர் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று வருகின்றார்.

தற்பொழுதும் இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் கோப்ரா, சியான் 60 போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து அதிகமாக பேசப்பட்டும், தகவல்கள் வெளியாகியும் வருகின்றது. அந்த வகையில் தற்போது விக்ரமின் சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆம் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு சுமார் 120 கோடி முதல் 150 கோடி வரை என கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் தானா என்பது தெரியவில்லை. ஆனாலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இத்தனை கோடி வரை தான் சொத்து மதிப்பா என சந்தேகத்துடன் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்…