தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரித்த வள்ளி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ப்ரியா ராமன். இவரும் நடிகர் ரஞ்சித்தும் நேசம் புதுசு திரைப்படத்தில் சேர்ந்து நடித்த போது காதலித்து திருமண செய்தனர்.
நடிகர் ரஞ்சித் ஹீரோ ரோல் தான் என்று இல்லாமல் பாண்டவர் பூமி திரைப்படத்தில் குணச்சித்திரப் பாத்திரத்திலும், சில படங்களில் வில்லனாகவும் அசத்தியிருப்பார்.
ஆனாலும் ஒரு கட்டத்தில் ரஞ்சித், ப்ரியா ராமன் இருவருமே சினிமாவில் பீல்ட் அவுட் ஆகினர். அதன் பின்பு ப்ரியா ராமன் செம்பருத்தி என்னும் சீரியலிலும், விஜய் டிவியில் நடிகர் ரஞ்சித் செந்தூரப்பூவே சீரியலிலும் நடித்துவருகின்றனர்.
1999ல் இணைந்த இந்த ஜோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முறைப்படி டைவர்ஸ் பெற்றனர். அதன் பின்னர் ரஞ்சித் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் ஓர் ஆண்டிலேயே அவரையும் பிரிந்தார்.
ஆனால் ப்ரியா ராமன் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் அண்மையில் இவர்களது கல்யாண நாள் வந்தது. இதில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தம்பதிகள் இணைந்துள்ளனர்.
சேர்ந்தே தங்களின் திருமண நாளைக் கொண்டாடியவர்கள் அப்போது எடுத்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். கூடவே கோர்ட் படி ஏறி, டைவர்ஸ் ஆகிவிட்ட நிலையிலும் இவர்கள் மனம் ஒத்து சேர்ந்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.