பாட்டியிடம் திருட வந்த வாலிபர்.. பாட்டி கொடுத்த தரமான தண்டனை.. வைரலாகும் வீடியோ

திருட்டு மிகத் தவறான ஒரு விசயம். அதனால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்லக் கூடாது, திருடக்கூடாது எனச் சொல்லி, சொல்லி வளர்க்கின்றனர். திடுடர்கள் தாமாகவே மனம் வந்து திருடும்வரை இங்கு திருட்டுச் சம்பவங்களையும் ஒழிக்க முடியாது என்பது தான் நிஜம்.

என்னதான் திருடர்களை போலீஸார் அவ்வப்போது கைது செய்து சிறையில் அடைத்தாலும் தண்டனைகாலம் முடிந்ததும், வெளியில் வந்து திருடுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடைகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிப்பது, இரவில் வீட்டில் புகுந்து பீரோவை உடைத்துக் கொள்ளையடிப்பது போன்ற பெரிய கொள்ளைகளைப் பார்க்கும் போது அதிர்ச்சியூட்டும்.

ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டிச் செல்லும் பலே திருடர்களும் இருக்கிறார்கள். இன்னும் சில திருடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயோதிகர்களை மட்டுமே குறிவைத்து திருடுவார்கள்.

இங்கேயும் அப்படித்தான் இரண்டு வாலிபர்கள் வயதானவர்களை மட்டுமே குறிவைத்து திருடி வந்தனர்.குறித்த இந்த சம்பவம் வெளிநாட்டில் நடந்துள்ளது. இங்கே ஒரு மூதாட்டி, தன் வீட்டு படிக்கட்டில் சேரில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்தார். தன் கையில் செல்போனை வைத்தபடி யூடியூப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்சீட்டில் இருந்தவர் மெல்ல இறங்கி பாட்டியின் அருகில் வந்து செல்போனை பிடுங்க முயன்றார். அப்போது வயதான பாட்டி உடனே செல்போனை விட்டுவிடுவார் என்று திருடன் நினைத்தார்.

ஆனால் பாட்டியோ அவர் தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை பிடுங்கி அவரை அடியோ, அடி என அடித்து துவைத்தார். ஒருகட்டத்தில் பாட்டில் அந்த பாட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திருடன் பைக்கின் பின்னால் ஏறி ஜூட் விட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.