குக் வித் கோமாளி புகழ் காதலியுடன் ரகசிய திருமணமா? அவரே வெளியிட்ட தகவல்!

குக் வித கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, அவரை தேடி பட வாய்ப்புகள் மழையாக கொட்டுகிறது.அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விருது விழாவில் கூறி இருந்தார்.இதனிடையே, புகழ் சில தினங்கள் முன்பு அவர் காதலித்து வந்த பெண் உடன் ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்கிற தகவல் பரவி வருகிறது.

அந்த திருமணத்தில் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள் என கூறப்பட்டது. மேலும், அவர் காதலித்த பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் எனவும் அதனால் தான் இவ்வளவு ரகசியமாக திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பார் என்றும் ஒரு பேச்சு உலா வருகிறது.

ஆனால், இதுகுறித்து புகழ் அளித்திருக்கும் பேட்டியில் தான் சிங்கிள் தான் என்றும் இப்படிப்பட்ட செய்திகளை பார்த்தால் தனக்கு சிரிப்பு வருகிறது என்றும் கூறி இருக்கிறார்.