ஒருவேளை சோத்துக்குகூட வழியில்லை.. கொரோனவால் ஏற்பட்ட பரிதாபம்… கஷ்டத்தில் பிரபல நடிகர்..!

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்னும் பழமொழி சினிமாக்காரர்களுக்கு ரொம்பவே பொருந்தும். வாய்ப்புகள் கிடைக்கும் போது பணம் கொட்டும். அதேநேரம் வாய்ப்புகள் இல்லாத போது அவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கி விடும். அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவர் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டத்தில் இருக்கிறார்.

நடிகர் சூரியகாந்த் தான் அவர். நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்த கேரக்டர் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யும் சூரியகாந்த் கடந்த 1981ல் வசந்தகாலம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். இப்போதும் துணை நடிகராக வேஷம் கட்டுவார். அண்மையில் கூட சிங்கம், காலா, காக்கிச்சட்டை போன்ற படங்களில் சின்ன, சின்ன ரோல்களில் வந்தார் சூரியகாந்த்.

இந்நிலையில் கரோனாவால் சூட்டிங் ரத்தாகி சினிமாத்துறை ஸ்தம்பித்துப் போனது. அண்மையில் தான் மீண்டும் சில தளர்வுகளுடன் சூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரியகாந்த்க்கு இந்த கரோனா காலம் இன்னும் அதிகமான பணமுடையைக் கொடுத்து இருக்கிறது. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் சோர்வு நிலைக்குப் போய்விட்டார் சூரியகாந்த். அவர் இதுகுறித்து அண்மையில் பேசியிருக்கிறார்.

அதில் சூரியகாந்த், ‘யாராவது பண உதவி செய்யுக்கள். மருத்துவச் செலவுக்கே பணம் இல்லாமல் தவித்துவருகிறேன். அதில் அவர் ஓப்பனாக சொன்னால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன்.’’எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.