கணவன் சடலம் முன் கதறி அழுத 30 வயதான மனைவி! பொலிசார் வந்து விசாரித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில் கணவன் கொலைக்கு மிக முக்கிய காரணமாக இருந்துவிட்டு அதை மறைத்து அழுது நாடகமாடிய மனைவி பொலிசில் வசமாக சிக்கியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கோதண்டபாணி (36). இவரது ம.னைவி நிரோஷா (30). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் நிரோஷாவின் அலறல் சத்தம் மற்றும் அழுகை சத்தம் அவர் வீட்டில் இருந்து பலமாக கேட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கேட்டபோது கோதண்டபாணியை மர்ம ஆசாமிகள் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிவிட்டதாக சடலம் அருகில் இருந்தபடி கதறியபடி கூறினார்.

தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொலிசார் விசாரித்த போது அங்கு மர்ம நபர்கள் வந்து சென்றதற்கான தடயம் எதுவும் இல்லை.

இதனால் சந்தேகமடைந்து நிரோஷாவிடம் பொலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்ட போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் விசாரணையின் போது நிரோஷா தனது காதலனுடன் சேர்ந்து கணவன் கோதண்டபாணியை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நிஷாவுக்கு மணிகண்டன் (30) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் கோதண்டபாணிக்கு தெரிந்ததால் மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் நிரோஷா-மணிகண்டன் ஆத்திரமடைந்து கோதண்டபாணியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் மணிகண்டனை நிரோஷா வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் தூங்கி கொண்டிருந்த கோதண்டபாணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.