பிரண்ட்ஸ் படத்தில் குட்டி விஜயாக நடித்தவர் இப்போ எப்படி உள்ளார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய், சூர்யா அவர்கள். இவர்கள் இருவரும் சினிமா உலகில் வளர்ந்து வரும் காலங்களில் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இவர் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட்டான படம் தான் பிரண்ட்ஸ். இந்த படம் 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த படமாகும்.

இந்த படத்தை அப்பச்சன் தயாரித்து இருக்கிறார்கள். மேலும் இந்த பிரண்ட்ஸ் படம் மலையாளத் திரைப் படத்தில் தலுவிவந்தது. இந்த படத்தில் தேவயானி, ரமேஷ் கண்ணன், விஜயலட்சுமி, வடிவேலு, ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் அப்போது மெகா ஹிட் அடித்தது . இது நடிகர் சூர்யா மற்றும் விஜய்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் இன்றுவரை காமெடிக்கு உதாரணமான படமாக அது திகழ்கிறது.

இந்த படத்தில் விஜயின் சின்ன வயசு கேரக்டரில் நடித்திருபப்பார் ஒரு சின்ன பையன். இவருடைய உண்மையான பெயர் பரத் ஜெயந்த். இவர் 1988ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இந்த படத்தில் நடிக்கும் போது பரத் திற்கு 14 வயதாகும்.

இவர் எம்.சி.டி.எம் சர்வதேச பள்ளியில் தான் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் லயோலா கல்லூரியில் விசுவல் கமம்யூனிகேசன் மற்றும் எம்.பி.ஏ முடித்தார். அதன் பின்னர் மாடலிங் துறையில் புகுந்தார். ஒரு செம்ம மாடலாக வலம் வந்தார் பரத் .

ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த பின் வானத்தைபோல மற்றும் பிரியமான தோழி ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்புக்கு சிறிது காலம் மு டக்கு போட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்த போய்விட்டார்.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்னும் படத்தில் நடித்தார் பரத் ஜெயந்த். தற்போது அஜிய் ஞானமுத்துவிற்கு அசிஸ்டன்ட் டைரக்டராக பணி புரிந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.