நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் அண்மையில் Netflix-ல் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.மேலும் நீண்டு கொண்ட போகும் நடிகர் தனுஷின் லைன் அப்-ல் சமீபத்தில் தெலுங்கு பட இயக்குனரான சேகர் கம்முலா என்பவரும் இணைந்தார்.
இந்நிலையில் இன்று தந்தையர் தினம் என்பதால் நட்சத்திரங்கள் பலரும் தந்தையர் தின ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தனுஷ் தனது இருமகன்களான யாத்ரா, லிங்கா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
