யோவ் தகப்பா எனக்கும் சாப்பாடு தாய்யா… இந்த பிஞ்சு குழந்தையின் தவிப்பைப் பாருங்க.. வைரலாகும் வீடியோ

குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும்.

அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகி விடுகிறது.

பொதுவாக சாப்பாட்டைப் பிடிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எனினும் சாப்பாட்டை பசிக்காக சாப்பிடுபவர்கள், வெறுமனே ருசிக்காக சாப்பிடுபவர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். சிலர் வாழ்வை நகர்த்துவதற்கு சாப்பாடும் ஒரு அங்கம் என நினைப்பார்கள். இன்னும் சிலரோ, ‘இந்தப் பொறப்புதான் நல்லா ரசிச்சு சாப்பிடக் கிடைச்சுதே’’ என்னும் பிரகாஷ்ராஜின் பாடலைப்போல் ரசித்து, ருசித்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

இங்கே ஒரு தகப்பன், தனது குழந்தையை பக்கத்தில் வைத்துவிட்டு அவர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அந்த குழந்தைக்கு முழுதாக ஒரு வயதுகூட ஆகவில்லை. அந்தக் குழந்தை தன் தந்தை சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு ஆவென்று வாயைத் திறக்கிறது. தந்தையோ செல்லமாக அவரே தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் குழந்தையோ மீண்டும், மீண்டும் ஆவென்று வாயைத் திறக்கிறது. இந்தக் காட்சி பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published.