குட்டி அஜித்தாக வரலாறு படத்தில் மிரட்டிய இந்த குழந்தை நட்சத்திரம் நியாபகம் இருக்கிறதா? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான். தல ரசிகர்கள் நீண்டநாட்களாக ஆர்வமாக காத்திருப்பது வலிமை படத்திற்காக தான்.

இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் , வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் வரலாறு படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்தில் தல அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.

அதில் வில்லன் அஜித்திற்கு சிறுவயது கதாபாத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.