8 ஆண்டுகளாக காதலித்துவிட்டு சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த இளைஞர்! இளம்பெண் எடுத்த முடிவு!!

சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான இளம்பெண். இவரும் பின்னத்தூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமாரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தெரிகிறது. இருவரும் கடந்த ஆண்டுகளில் பலமுறை தங்களது பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் சந்தித்து, நெருக்கமாகவும் இருந்துள்ளனர். மகேஷ்குமாரும் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் மகேஷ்குமாரின் பெற்றோருக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. ஆனால் இளம்பெண்ணோ வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மகேஷ்குமார் சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊருக்கு திரும்பிய அவரிடம், அவரது காதலி பேசுவதற்காக போன் செய்துள்ளார். ஆனால் பலமுறை போன் செய்தும், அதனை மகேஷ்குமார் பொருட்படுத்தவில்லை.

அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த இளம்பெண் மகேஷ்குமாரின் வீட்டிற்கே சென்று விசாரித்துள்ளார். அப்போது மகேஷ்குமார் வீட்டில் இல்லை என்று அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

சாதியை காரணமாக கூறி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மகேஷ்குமாரை அடைத்து வைத்துள்ளதாக கூறி, அந்த இளம்பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அப்படியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு முதலமைச்சர் அலுவகத்தில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்.