தொடர் மழையால் ஆற்றில் திடீர் வெள்ளம்.. பலர் மாயம் ! அதிர்ச்சி தரும் வீடியோக்கள்!

நேபாள நாட்டில் தற்போது பருவமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்யும் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

அங்குள்ள மேலம்ஷி மற்றும் இந்திரவதி ஆறுகளில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அந்நாட்டின் பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றுநீர் புகுந்தது.

நேற்று பெய்த கனமழை காரணமாகவும், மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகவும் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் மாயமாகியுள்ளதாகவும் சிந்துபல்சவுக் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளப்பெருக்கு மழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழும் காட்சிகளும் வெளிவந்துள்ளன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.