அடிகுழாயில் அழகாக நீர் இறைத்து குடிக்கும் குட்டி யானை! என்ன ஒரு அறிவு… வைரலாகும் க்யூட் வீடியோ

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் த விர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் வி லங்கு ஆகும். யானைகள் மிகவும் வ லிமையானவை; வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையில் உள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியன கூட நெருங்க முடியாத வ லிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொ ல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.

யானைகளுக்கு நுண் உணர்வு மிகவும் அதிகம். அது இயல்பாக, வேகமாக அனைத்தையும் கற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் பல காலங்களில் நிரூபித்து உள்ளனர்.அதற்கு ஏற்ற வகையில் பல சூழல்களில் நாம் அது தொடர்பான வீடியோக்களையும் செய்திகளையும் பார்த்தும் கேட்டும் வருகின்றோம்.

அப்படியான ஒரு வீடியோவை தான் தற்போது நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தூர் பகுதியில் அமைந்துள்ளாது ஜல்தபாரா என்ற காட்டுப் பகுதி. அங்கு கோடை தாக்கம் தாங்க முடியாமல் சுற்றித் திரிந்த குட்டி யானை ஒன்று,

அங்கிருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள அடிகுழாயில், பம்பை அடித்து தண்ணீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.