ஒரே ஒரு கடிதத்தால் சிதைந்து போன குடும்பம்.. கல்லூரி காதலிக்காக கணவன் செய்த துணிகர செயல்!!

தமிழகத்தில் கல்லூரி காதலிக்காக, கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம், பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். வங்கி ஊழியரான இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த தாரணி தேவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில், கவின் பிரசன்னா என்ற ஆண் மகன் உள்ளார். கணவனின் நடவடிக்கை பிடிக்காத காரணத்தினால் தாரணி தேவி ஆத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுகடந்த ஆறு மாத காலமாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மனைவியின் தாய் வீட்டிற்கு சென்ற அவர், மனைவியை சமரசம் செய்து தன்னுடைய வீட்டிற்கு காரில் அழைத்து வந்துள்ளார்.

அப்போது, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கோட்டைமேடு பகுதி மேம்பாலத்தில் வந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீரென்று காரை வழிமறித்து தன்னையும் தனது மனைவியும் தாக்கி மனைவியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டதாகவும்,

அதன் படுகாயமடைந்த மனைவியை மருத்துவமனையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளும் படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், சபரிநாதன் சொன்னது போல் அங்கு எந்த ஒரு சங்கிலி பறிப்பிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், பொலிசாருக்கு சபரிநாதம் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

இதனால், பொலிசார் சபரிநாதன் வீட்டை சோதனை மேற்கொண்ட போது, அவருடைய கல்லூரி காதலியின் கடிதம் சிக்கியுள்ளது. அதாவது, சபரிநாதன் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த, ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

அதன் பின், வீட்டிற்கு தெரியாமல் இருவரும் திருட்டுத்தனமாக நண்பர்கள் உதவியுடன், பண்ணாரி அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

சபரிநாதன், ரேவதியுடன் கோபியில் தனி வீட்டில் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்தநிலையில், சபரிநாதனுக்கு, அவரது பெற்றோர் தரணி தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இவருக்கு கவின் பிரசன்னா என்ற மகன் பிறந்தான். சபரிநாதனின் கல்லூரி காதலி ரேவதி, கடிதம் ஒன்றை எழுதி மனைவி தாரணி தேவிக்கு அனுப்பியுள்ளார்.

அதில், சபரிநாதனுக்கு முதல் மனைவி நான் தான், தன்னால் மட்டுமே சபரினாதனை சந்தோஷமாக் வைத்திருக்க முடியும், அதனால் நீ என் வாழ்க்கையை விட்டு விலகி விடு என்று கூறி தாங்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இணைத்து அனுப்பியுள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்குள் க.ருத்து வே.றுபாடு ஏற்படவே, கணவனை பிரிந்து மனைவி தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 6 மாதமாக காதலி வீட்டில் இருந்த சபரிநாதனிடம், ஊரரிய திருமணம் செய்த தாரணி தேவியை எல்லோரும் மனைவி என்று அழைக்கும் நிலையில்,

அதற்கு முன்னதாக கல்லூரி படிக்கும் போதே கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்திவரும், தன்னை எல்லோரும் கீப் என்றே அழைப்பதாகவும் வேதனை தெரிவித்த ரேவதி அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக க.டுமையான மனக் குழப்பத்தில் இருந்த சபரிநாதன் தாரணி தேவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ரேவதி அனுப்பிய கடித விவரம் தாரணி தேவியின் குடும்பத்திற்கு தெரியாது என நினைத்த சபரி நாதன்,

மனைவியின் வீட்டிற்கு சென்று தனி குடித்தனம் அழைத்துச்செல்வதாக கூறி 20 ஆயிரத்திற்கும் மேல் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் பாத்திரங்களுடன் தனது மாமனாருடைய காரில் மனைவி தாரணியை அழைத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார்.

வழியில் சங்ககிரி அருகே ஒரு ஹோட்டலில் உணவருந்திவிட்டு கிளம்பிய போது சபரிநாதன் மற்றும் தாரணி இடையே ரேவதி தொடர்பான பேச்சு எழுந்து, வாக்குவாதம் முற்றியது.

அப்போது ஆத்திரம் அடைந்த சபரிநாதன், மனைவி தாரணி தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின், கார் டிக்கியில் வைத்திருந்த அரிவாள் மனையை எடுத்து காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதோடு, வீட்டிற்காக வாங்கிய கத்தியை எடுத்து சாலையில் போட்டுள்ளார்.

அதன் பின், தாரணி தேவியின் 7 பவுன் தங்க சங்கிலியை கழட்டி கைக்குட்டையில் சுற்றி அருகிலிருந்த ஆசிரியர் காலனி பகுதியில் வீசிவிட்டு வழிப்பறி கொள்ளையர்களால் கொலை நடந்தது போன்று நாடகமாடி சிக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சபரினாதன் , குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் காவலில் ராசிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டான்.

இதற்கிடையே இந்த கொலை சம்பவத்துக்கு மூல காரணமான சபரிநாதனின் கல்லூரி காதலி ரேவதியையும், முதல் திருமணத்தை மறைத்த சபரினாதனின் பெற்றோரையும் காவல்துறையினர் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையை தாரணி தேவியின் பெற்றோர் முன்வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.