நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலை பார்த்துள்ளீர்களா? அச்சு அசல் அக்கா போலவே இருக்கிறாரே! புகைப்படம் உள்ளே

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்பவர் காஜல் அகர்வால்.கல்லுரி படிப்பின் இறுதி ஆண்டில் நடந்த லோரியல் விளம்பரத்தில் மாடலாக நடித்த காஜலை இயக்குனர் நானே பட்டேகர் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார்.2006-ம் ஆண்டு க்யூன்…ஹோ கயா நா எனும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக அறிமுகமானார். ராம் சரனுடன் மகதீரா திரைப்படத்தில் நடித்த இளவரசி கதாபாத்திரமே இவரது திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது.

தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் மாற்றான், துப்பாக்கி, விவேகம், பிசினஸ் மேன் போன்ற பல வெற்றி ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.தமிழ்,தெலுங்கு,மலையாலம் என பல மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.இவருக்கு வரும் 30ஆம் தேதி கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.

இதற்க்கான கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருந்தார்.நடிகை காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முப்பு திருமணம் ஆகிவிட்டது.

இவருக்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் எடுக்கட்ட நிஷா அகர்வாலின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நடிகை காஜல் அகர்வாலை பார்ப்பது போலவே இருக்கிறது என கமென்ட் செய்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.