திருட்டுத்தனமாக கல்யாணம் செய்தோம்! முதன்முறையாக உண்மையை கூறிய ஆல்யா- சஞ்சீவ்

சின்னத்திரை ஜோடிகளில் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இருப்பவர்கள் ஆல்யா- சஞ்சீவ் ஜோடி.ராஜாராணி தொடரில் நடித்தபோது இருவருக்கும் பழக்கமாகி, காதல் மலர்ந்தது.இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆல்யாவின் வீட்டில் பலத்த எதிர்ப்பும் இருந்தது.அதையும் தாண்டி, ராஜா ராணி சீரியல் முடியும் நேரத்தில் எந்த காரணத்திற்காகவும் ஆல்யாவை இ ழந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது பிறந்தநாளில் ஆல்யாவுக்கே தெரியாமல் கோவிலில் வைத்து தாலி கட்டினாராம் சஞ்சய்.

அதன்பின்னர், ஆல்யாவின் வீட்டுக்கு சென்று முறைப்படி பெண் கேட்ட போதும், தரமறுத்து விட்டார்களாம்.ஆனாலும் ஆல்யா எனக்கு சஞ்சீவ் தான் வேண்டும் என கூறி, வீட்டை விட்டு வந்துவிட்டாராம். தொடர்ந்து சஞ்சீவின் வீட்டில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு முறைப்படி நிக்காஹ் நடந்து முடிந்துளளது.இதனையடுத்தே அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக மிக பிரம்மாண்டமாக ரிசப்ஷனை நடத்தியுள்ளனர்.

 

அந்நிகழ்ச்சிக்கு கூட சஞ்சீவ் க டுமையாக உழைத்ததாகவும், மிக அழகான Themeவுடன் கொண்டாட்டமாக நடந்து முடிந்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் ஆல்யா- சஞ்சீவ் தம்பதியினர்.

இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் அய்லா என்ற பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.