பாலிவுட்டையும் மிஞ்சிய ஏழை தாத்தா! மீண்டும் மீண்டும் மெய்மறக்கச் வைத்த வயலினில் இசை

கொல்கத்தாவைச் சேர்ந்த நலிந்த கலைஞர் ஒருவர், பாலிவுட் மெல்லிசை பாடல்களை அற்புதமாக வயலினில் வாசித்து அசத்துகிறார்.

போகோபன் மாலி (Bhogoban Mali) கொல்கத்தாவைச் சேர்ந்தவர். வயலினின் வாசிக்கும் நலிந்த கலைஞரான இவர், கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளார்.

செல்லும் இடங்களுக்கு எல்லாம் வயலின் எடுத்துச் செல்லும் அவர், பாலிவுட் மெல்லிசை பாடல்களை அற்புதமாக வாசிக்கிறார்.

அவர் வயலின் வாசிக்கும் வீடியோவை பதிவு செய்த ஒருவர் டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். ஆரிப் ஷா என்பவரின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள போகோபான் மாலி வீடியோ, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிகவும் திறமையான கலைஞர். அவரின் திறமையை திரையுலகினர் அங்கீகரிக்க வேண்டும். குறுகிய கால நிவாரணம் கொடுத்து உதவுவது மட்டுமல்லாமல், இத்தகைய கலைஞர்களின் திறமைகள் வாழ்நாள் முழுவதும் அங்கீகரிக்கப்படும் வகையிலான உதவிகளை, வளர்ந்த கலைஞர்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.