ஜெயம் ரவி படத்தில் நடித்துள்ளாரா நடிகை சாய் பல்லவி..! அட இந்த திரைப்படத்திலா? புகைப்படம் இதோ

தனது முதல் படத்தின் மூலம் புகழின் உச்சதிகே சென்றவர் தான் நடிகை சாய் பல்லவி.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக தோன்றி இருந்தாலும் அன்றைய கால கட்டத்தில் இவர் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமாக வில்லை.அனால் மலையாள படமான பிரேமம் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவர் அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சாய் பல்லவி அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமா துறையில் தற்போது அதிகபடியான படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவருக்கு தற்போது சினிமா மார்க்கெட்டில் பெரும் டிமாண்டு இருந்து வருகிறது.நடிகை சாய் பல்லவி அவர்கள் நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.ஆனால் இதற்கு முன்பே, மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம், தென்னிந்திய அளவில் இவருக்கு புகழை பெற்று தந்துவிட்டது.தியா படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் ப்ரேமம் படத்திற்கு முன், தமிழில் ஜெயம் ரவி மற்றும் கங்கனா ரனாத் நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில், கதாநாயகியின் தோழியாக நடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.