உடல்நலக்குறைவால் புதுப்பெண் இறந்ததாக கூறிய கணவன்… சடலத்தை காண வந்த குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பூஜா. இவருக்கும் ராஜீவ் என்பவருக்கும் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார், பூஜா வீட்டுக்கு போன் செய்து உங்கள் மகள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் என கூறினர்.

இதை கேட்டு அதிர்ந்து போன அவர்கள் பதறியபடி ராஜீவ் வீட்டுக்கு வந்தனர். அங்கு பூஜாவின் சடலம் இல்லாததை கண்டு குழம்பி போனார்கள்.

பின்னர் ராஜீவ் மற்றும் குடும்பத்தார் அவர்களிடம் கூறுகையில், பூஜாவின் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்துவிட்டோம் என கூற அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாங்கள் வருவதற்குள் ஏன் அவசர அவசரமாக உடலை தகனம் செய்யவேண்டும். பூஜாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜீவ் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்கள் தான் அவளை கொன்றுவிட்டனர்.

எங்கள் மகள் கையில் வைத்திருந்த மருதாணி கூட முழுவதுமாக அழியவில்லை. அதற்குள் இப்படி ஆக்விட்டது என வேதனை தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.