முக கவசம் அணிந்து கொண்டு சொந்த பாட்டியிடமே பேத்தி ஒருவர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் முனியம்மாள். மாற்றுத்திறனாளியான இவரிடம் முகக்கவசம் அணிந்துவந்த பெண் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளதாகக் கூறி முனியம்மாளின் வீட்டிற்குள் வந்துள்ளார்.
அதன் பின் முனியம்மாளை அந்தப் பெண் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 11 பவுன் தங்க நகையை எடுத்துச் சென்றுள்ளார்.
தகவலறிந்த உசிலம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முனியம்மாளிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்தனர்.
அதன்பின் விசாரணை மேற்கொண்ட காவலர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது முனியம்மாளின் பேத்தி உமாதேவி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தொடர்ந்து உமாதேவியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த பாட்டியிடமே பேத்தி கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.