தொகுப்பாளினி மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

சினிமா வாய்ப்புக்காக வாய்ப்பு இல்லாத நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அதன் மூலம் இணையவாசிகள் மத்தியில் தங்கள் பெயரையும் பேச வைத்துவிடுகிறார்கள். அந்த பட்டியலில் தொகுப்பாளினி ஒருவரும் உண்டு. அதிலும் அவரது புகைப்படங்கள் நடிகைகளுக்கே சவால்விடும் வகையில் அமையும்.

சன் டிவியின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் மகேஸ்வரி. அசத்தப்போவது யாரு? என்னும் நகைச்சுவை ஷோவின் மூலம் தொகுப்பாளியினியாக இண்ட்ரோ ஆனார் மகேஸ்வரி. தொடர்ந்து சில நிகழ்வுகளில் தொகுப்பாளராக வந்தார். தொடர்ந்து கல்யாணம் முடித்த இவர், அதன் பின்னர் எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை. இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் மகேஸ்வரி முன்னரே சென்னை 28, மந்திரப்புன்னகை, குயில் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

இப்போது முதல்முறையாக மகேஷ்வரி தனது மகனோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம தொகுப்பாளினி மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.