சினிமாவிற்கு வருவதற்கு முன் இவர் என்ன செய்தார் தெரியுமா? இவர் செய்ததை பாருங்க.. ஆச்சிர்யத்தில் ரசிகர்கள்..!

அன்றைய காலத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ் போன்ற நடிகர்களின் வெற்றி படங்களுக்கு வித்திட்டவர் வினுசக்கரவர்த்தி.வினுசக்கரவர்த்தி கிராமத்துப் பெரியவர், நாட்டாமை, தலைவர், காவல் அதிகாரி என இவர் ஏற்றுக் கொள்ளாத கதாபாத்திரமே இல்லை என்று கூட கூறலாம். சினிமாவில் இவர் வெற்றி அடைவதற்கு இவருடைய மேனரிசம் தான் ஒரு முக்கிய காரணம்.இவர் ஒருமுறை நாடகத்தில் எமதர்ம வேஷம் போட்டு நடித்துள்ளார். அதை பார்த்த சென்னையில் டிஜிபியாக இருந்த அருள் என்பவர் உன் நடிப்பு அருமையாக உள்ளது. உன் உருவமும் போலீஸ்க்கு வேலைக்கு ஏற்றது போல் உள்ளது எனக் கூறியுள்ளார்.

இது மாதுரியான பலதரப்பு கூற்றை கேட்ட பிறகு இவருக்கும் காவல்துறை பணியை தேர்வு செய்யும் முடிவு தோன்றியது. இதனால் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டிஜிபி அருள் சந்தித்து அவருடைய அறிவுரையின் பேரில் உதவி ஆய்வாளராக தேர்வானார். பின்பு வேலூரில் போலீஸ் பயிற்சியை முடித்துவிட்டு சென்னையில் லைட் ஹவுசில் உதவி ஆய்வாளராக 6 மாதம் பணியாற்றியுள்ளார்.

அதற்கு முன்பாகவே இவருக்கு நடிப்பு கலையில் ஆர்வம் இருந்தது அதனை அறிவதற்கு முன்பாகவே இவர் அரசு பணியில் தேர்வாகிவிட்டார். சினிமாவில் ஆர்வம் இருந்ததாலும், போலீஸ் வேலை பிடிக்காமல் போனதாலும் போலீஸ் வேலையை விட்டார் . பின்பு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ரயில்வே துறையில் துணை ஆய்வாளராக சேர்ந்துள்ளார் .

அப்போது ரயிலில் பயணம் செய்த கன்னட இயக்குனரான புட்டண்ணா கனகல் என்பவர் இவரை பார்த்து மீண்டும் சினிமா பாதைக்கு அழைத்து வந்துள்ளார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பு மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென சினிமாவில் ஒரு இடம் பிடித்தார்.

இவரது நடிப்பில் ஏராளமான கதாப்பதிரத்திர்க்கு உ யிர் ஊட்டினார் அதுவும் சுந்தரா ட்ராவல்ஸ் என்ற படத்தில் இவரது நடிப்பு தனி திறமை வாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவர் நடித்த நினைத்தேன் வந்தாய், அருள், அருணாசலம், அமர்க்களம், நாட் டாமை, நிலவே வா, ஜெமினி, உன்னை தேடி, தமிழன் ,

என் ஆசை ராசாவே, வில்லன்,கோயம்புத்தூர் மாப்பிள்ளை, சொக்கதங்கம் , சிட்டிசன், மனிதன், ராஜாதி ராஜா,அ ண்ணாமலை. முதலிய படங்களில் அவருக்கு என்று தனி திறமை வாய்ந்த நடிப்பு வெளிப்பட்டது . இவரது நடிப்பிற்கு இன்றளவும் வரவேற்ப்பு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.